புதிய நிர்வாகிகள் தேர்வு :
திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், நெல்லை மாவட்டம் ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின்முறைக்குச் சொந்தமான ம.சு.இருளாயி அம்மாள் தர்ம டிரஸ்ட் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், புதிய நிர்வாகிகளாக தலைவர் பகத்சிங், துணைத்தலைவர் முத்துக்குமார், செயலாளர் ஜெயராஜ், இணைச்செயலாளர் கிட்டு என்கிற ஆறுமுகம், பொருளாளர் முருகன் மேற்படி நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களாக சண்முகம் பிள்ளை மற்றும் சுடலைமுத்து பிள்ளை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் வருகின்ற வைகாசி மாதம் 9 ம் தேதி (மே.22) அருள்மிகு முருகப்பெருமாள் பால்குடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, டிரஸ்டின் நிறுவனர் ம.சு.இருளாயி அம்மாள் உத்திரவின்படி திருப்பரங்குன்றம் வடக்கு ரக வீதி 16 மண்டபம் அருகே உள்ள ஐம்பதூர் தேவாங்கர் சத்திரத்தில் அன்னதானம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment