தங்கை பிள்ளைகலுக்கு காது குத்து விழாவிற்காக ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடாய்கள் சீதனமாக வழங்கிய தாய் மாமன்கள் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 5 May 2024

தங்கை பிள்ளைகலுக்கு காது குத்து விழாவிற்காக ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடாய்கள் சீதனமாக வழங்கிய தாய் மாமன்கள்


தங்கை பிள்ளைகலுக்கு காது குத்து விழாவிற்காக  ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடாய்கள் சீதனமாக வழங்கிய தாய் மாமன்கள்


மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். பால் வியாபாரம் செய்து வருகிறார். செந்தில் மற்றும் அவரது சகோதரர் வடிவேல் ஆகியோரின் குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் குழந்தைகளின் தாய் மாமன்கள் ஊர் எல்லையான அய்யனார் கோவிலில் இருந்து கேரளா செண்டை மேளம் முழங்க 21 தாம்பாள தட்டுகளில் மா, பலா, வாழை என முக்கனிகளை வைத்து ஆள் உயர இரண்டு குத்து விளக்குகளுடன் பாத்திரங்களோடு சீதனம் கொண்டு வந்தனர்.


முக்கிய சீர்வரிசைகளுக்கு பின் தமிழர்களின் பாரம்பரியத்தை காட்டும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் சண்டை கிடாய்கள் உள்ளிட்டவற்றை  தாய் மாமன்கள் சீதனமாக வழங்கினர். காது குத்துக்கு ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் சண்டை கிடாய்களை தாய் மாமன்கள் சீதனமாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad