தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு பிரகடனத் தீர்மானங்கள்.
மதுரை வலையங்குளம் பகுதியில் 41 வது வணிகர் தினத்தை முன்னிட்டு "வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு" நடைபெற்று வருகிறது.
இரட்டை விலைகொள்கை ஆன்லைன் வர்த்தகத்தில் கார்ப்பரேட் ஆதிபத்தை அகற்றிட வேண்டும்..
ஒரே நாடு ஒரே வரி முழக்கம் தணிக்கை செய்யப்பட்ட வரிவிதிப்புக்கு அபராதம் தவிர்த்திட வேண்டும்..
இயற்கை பேரிடர் வணிக பாதிப்புக்கு அரசு காப்பீடு திட்டம் வழங்கிட வேண்டும்.
ஜி.எஸ்.டி உணவு பாதுகாப்பு சட்டங்களில் உள்ள முரண்பாடுகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
சங்கசாவடிகள் அகற்றப்பட வேண்டும்.
டெல்டா மாவட்டங்களோடு தென் மாவட்டங்களை இணைத்து வச பயணிகள் ரயில் போக்குவரத்து இயக்கிட வேண்டும்
தொடர்ந்து பேசிய அமைச்சர் மூர்த்தி கூறுகையில்:
தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சி நடத்தினாலும் வணிகர்களுக்கு எப்போதும் துணையாக கோரிக்கையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை இந்த மூன்றாண்டு காலமாக பார்க்கிரீர்கள். தூத்துக்குடி வெள்ளதின்போது வணிகர்கள் கூட்டுறவு சங்கத்தின் குறைந்த வட்டியில் கடன் வேண்டும் என்று கேட்டார்கள், 80 சதவீதத்திற்கும் வட்டி இல்லாத திட்டத்தை நிறைவேற்றினோம். வணிகர்கள் 80 லட்சம் ஆக இருந்ததை ஒரு கோடியாக மாறியதற்கு வணிகர்கள் மீது நாங்கள் கொண்டுள்ள அக்கறை. வணிகர்கள் மீதும் சிறு வியாபாரிகள் மீது தவறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதிகாரிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த மூன்று ஆண்டுகாலத்தில் வணிகர்களிடத்தில் நான் ஒரு டீ கூட இலவசமாக குடி, அதிகாரிகள் கையூட்டு ஒன்றிரண்டு இடத்தில் பெற்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்ளோம். அடுத்த ஆண்டு விடுதலை முழக்கம் மாநாடாக இல்லாமல் நீங்கள் மௌனமாக எதை கேட்டாலும் முதல்வர் உங்களுக்கு செய்து கொடுப்பார். தமிழ்நாட்டில் நீங்கள் போராட வேண்டியதில்லை. உங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தான் அரசின் வருமானம் கூடும், எனவே உங்களை எங்கள் பிள்ளையாக நாங்கள் பார்த்துக் கொள்வோம். வணிகர்களின் பாதுகாவலனாக முதல்வர் இருப்பார்
மாநாட்டில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில்:
இன்னும் இரண்டு மாதத்தில் தமிழக முதல்வர் என்ன சொல்கிறாரோ ஒன்றிய அரசு செய்யும் நிலை உருவாகும். ஒரு உங்களின் பிரச்சனைகளை முதல்வர் உடனுக்குடன் தீர்வு கண்பார். வணிகர்கள் எந்தவித கோரிக்கைகள் வைத்தாலும் அதை நிறைவேற்றும் அரசாக இது இருக்கும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும், அது நமது மாநாடு என்று முதல்வர் கூறினார். நான் வணிகன் என்கிற முறையில் சரியான திட்டத்தை முதல்வர் உங்களுக்கு நிறைவேற்றி தருவார் என்று உறுதி அளிக்கிறேன்.
No comments:
Post a Comment