கடந்த பிப்ரவரி மாதம் ப்ளஸ் 2பொதுத்தேர்வு ஆரம்பித்து ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 6 May 2024

கடந்த பிப்ரவரி மாதம் ப்ளஸ் 2பொதுத்தேர்வு ஆரம்பித்து ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது

 


கடந்த பிப்ரவரி மாதம் ப்ளஸ் 2பொதுத்தேர்வு ஆரம்பித்து ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதில் மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். அதற்க்கான தேர்வு முடிவுகள் இன்று வெளிவந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் மாணவிகள் முதல் இடத்தை தக்க வைத்துள்ளனர். முதல் மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் 97.45%எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  X. ஜெப்ரின்இருதயா என்ற மாணவி 569 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார். S . அகமது நிஷா 564 இரண்டாவது இடம், S.நந்துஷாதேவி 557 முன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். அதேபோல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் S.கணேஷ்வேல் வணிகவியல் பாட பிரிவில் 529 மதிப்பெண் பெற்று முதல் இடமும், M. பவித்ரசிலம்பரசன் 523இரண்டாம் இடமும் M.மதன்குமார் 521மூன்றாம்இடமும் பிடித்தனர். மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் தேர்வு முடிவுகளை பள்ளியில் பார்த்து விட்டு சென்றனர்.மதுரை மாவட்டத்தில் மட்டும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 32064 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad