மதுரையில் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த கார் சென்டர் மீடியத்தில் மோதி தலைக்குப்பற விழுந்து விபத்து
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் கார் சென்டர் மீடியத்தில் மோதி விபத்துக்குள்ளாகி தலை குப்புற கவிழ்ந்து கிடப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் தனியார் டாக்ஸி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியத்தில் மோதியதில் கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சாகுல் ஹமீதை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து மதுரை கரிமேடு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாகுல் ஹமீது இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கவிழ்ந்துள்ள தாரை மீட்பு வாகனம் கொண்டு மீட்கும் பணியை ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment