திருமங்கலம் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் வாழை தோப்பு மற்றும் வீடுகள் சேதம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 16 May 2024

திருமங்கலம் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் வாழை தோப்பு மற்றும் வீடுகள் சேதம்

 


திருமங்கலம் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் வாழை தோப்பு மற்றும் வீடுகள் சேதம்.



கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாகி மக்களை வாட்டி வதைத்தது இதில் மே நான்காம் தேதி அக்கினி நட்சத்திரம் ஆரம்பித்து 109 ° வெப்பநிலையை தாண்டி வெயில் தாக்கம் அதிகம் இருந்தது இதனால் வானிலை அறிக்கை பொதுமக்கள் யாவரும் வெளியில் வர வேண்டாம் என்று கூறியிருந்தனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன் சென்னை மற்றும் தமிழக முழுவதும் கோடை மழை சூறாவளி காற்றுடன் பெய்தது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்தனர் அது ஒரு பக்கம் இருக்க சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையினால் விவசாயிகள் நிலங்கள் பாதிப்படைந்தன இதில் மிகவும் மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் கிராமத்தில் சுமார் 200வாழை தோப்பு பாதிப்படைந்து வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தது இதனால் அதன் உரிமையாளர்கள் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதித்து மிகவும் வேதனை அளிக்கிறது. கடந்த ஆண்டு வாழைதார் 600,700ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது ஆனால் இந்த ஆண்டு 150ரூபாய்க்குதான் விற்பனை ஆகிறது என்று கூறினார்.மேலும் இன்னும் ஆறு நாட்களுக்கு கனமழை இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக அரசு இதற்கு மானிய முறையில் தீர்வு காண வேண்டும் என்று கூறினர் மேலும் வீடுகளும் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad