மதுரை தோப்பூரில் அமைந்துள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் செவிலியர் கண்காணிப்பாளர் கனகவேலம்மாள் விழாவிற்கு தலைமை வகித்தார் . மற்றும் ஜான்சிராணி, பாத்திமா ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஸ்டெல்லா பிரசில்லா தனலட்சுமி ஆகியோர் வரவேற்புரை கூறினர்.
விழாவில் செவிலியர் கோமதி சுற்றுச்சூழல் மேம்படுத்தவும் மருத்துவமனை பசுமை வளாகத்தில் மரம் நடுவது குறித்து விழிப்புணர்வாக பேசினார்.
பச்சை நிறம் , நீல நிறம் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையும் உற்சாகத்தை வழங்கி நோய்கள் குணமாகும்.
அதே போல் நமது சுற்றுச்சூழல் மேம்படுத்த மரம் நட வேண்டும் பசுமை மரங்கள் வளர்ப்பதினால் கார்பன் டையாக்சைடு உரியப்பட்டு ஆக்சிசன் அதிக அளவில் வெளியேறும் ஆகையால் சுற்றுச்சூழலை மேம்படுத்த மரம் நட வேண்டும் .
நாம் நகர்புறங்களில் இருந்து கிராமப்புறங்களான செல்கிறோம் மழை நகரங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா செல்கிறோம் .
ஆனால் மலை நகரங்களில் உள்ளவர்கள் நகர்ப்புறங்களுக்கு ஆன்மீக சுற்றுலாவை தவிர மற்ற நேரங்களுக்கு வருவதில்லை காரணம் அவர்களுக்கு தேவையான பசுமையான சூழ்நிலை அங்கே உள்ளது .
ஆகையால் நாம் பசுமை வளர்க்க மரம் நட வேண்டும் அந்த நடப்பட்ட மரத்தை தொடர்ந்து பராமரித்து வர வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்படுவதுடன் இயற்கையான காற்று , அழுத்தம் இல்லாத நல்ல மனநிலை போன்றவை நமக்கு கிடைக்கும் எனக் கூறினார்.
பின்னர் மருத்துவமனைமையில் உள்ள பசுமை வளாகத்தில் செவிலியர்கள் செவிலிய உதவியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உதவியுடன் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.
செவிலியர் தின விழா நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக கோமதி அவர்கள் தலைமையில் ஃப்ளோரோ நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனர்.
நோயாளிகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகளை தவிர்ப்பதும் அவற்றை நோயாளிகளுக்கு வழங்காமல் பாதுகாப்பதும் நமது நோக்கமாகும்.
நோயாளிகளிடம் அன்பாகவும் கருணையாகவும் பேசி அவர்களின் உடல் நலனில் அக்கறையுடன் கவனித்துக் கொள்வதும் நமது கடமை ஆகும்.
நோயாளிகளை விருப்பு வெறுப்பின்றி சமமாகவும் அவர்களின் நலனின் அக்கறையுடனும் பாரபட்சம் இல்லாமல் கவனித்து கொள்வேன் என உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில் தோப்பூர் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர் காந்திமதி நாதன் மற்றும் மருத்துவர்கள் ஜெய் கணேஷ், இளம் பரிதி மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் செவிலிய உதவியாளர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரங்கத்தில் செவிலியர்களின் நடனம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
செவிலியர் கோமதியின் பசுமை போற்றுவோம் என மரங்கள் வளர்பதின் நன்மைகளும் அவற்றின் சுற்றுப்புற தூய்மை உடல் நலன் மனநலன் குறித்த பேச்சு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. முடிவில் செவிலியர் சுதா நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment