சோழவந்தானில் பிரதோஷ விழா: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 6 May 2024

சோழவந்தானில் பிரதோஷ விழா:

 


சோழவந்தானில் பிரதோஷ விழா:


மதுரை மாவட்டம், சோழவந்தானில் அமைந்துள்ள பிரளயநாதர் சிவன் ( விசாக நட்சத்திர) ஆலயத்தில், பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை வெட்டி, இக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரர், சிவபெருமானுக்கும் பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதை அடுத்து, சுவாமி அம்பாள் ரிஷப வானத்தில் அலங்கரிக்கப்பட்டு, கோயில் வளாகத்தில், வலம் வந்து பக்தருக்கு அருள் பாலித்தனர். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இதை அடுத்து, பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில், தொழில் அதிபர் எம் .வி. எம் .மணி, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருது பாண்டியன், செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி பூபதி, வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, இக்கோயில் அமைந்துள்ள சனீஸ்வர லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகத்தின் வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து செய்திருந்தனர். இதே போல, தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயம், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயம், திருமங்கலம் மீனாட்சி திருக்கோவில், மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கிய விழா ஆலயம், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad