தேனி அருகே பண்ணை வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான சாமி சிலைகள், பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பண்ணை வீடு மதுரை நேரு தெருவை சேர்ந்த சோமசுந்தரம் மனைவி தேன்பழம் (வயது 66). இவர் டயர் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ளது. அந்த வீட்டில் அவருடைய மகன் வசித்து வந்தார். 6 மாதத்துக்கு முன்பு அவர் வியாபார நிமித்தம் நாகர்கோவிலுக்கு சென்று விட்டார். இதனால் பண்ணை வீடு பூட்டியிருந்தது.
தேன்பழம் அவ்வப்போது பண்ணை வீட்டுக்கு சென்று பார்வையிட்டு வந்தார். அதன்படி நேற்று முன்தினம் அவர் பண்ணை வீட்டை பார்க்க வந்தார். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி இருந்தன.
*சிலைகள் திருட்டு*
வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கண்ணன், ராதையின் பித்தளை சிலை, மீன் சிலை, கொம்பு போன்ற சிலைகள் 2 பிரீஷர் பாக்ஸ், ஒரு பிரிட்ஜ், 3 ஏ.சி. ஆகிய பொருட்கள் திருடு போயிருந்தன. திருடுபோன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் தேன்பழம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த திருட்டை மர்ம நபர்கள் கும்பலாக வந்து நிகழ்த்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர் இந்தநிலையில் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் அறிவுறுத்தலின் படி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் மூலம் பொருட்களை திருடிய கோடாங்கி பட்டியை சேர்ந்த ரமேஷ் 45,சங்கர் 45,அருண்பாண்டி 30,சிலம்பரசன் 35,ஆனந்த் 34,ஜெகதீசன் 30 ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment