சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 6 May 2024

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

 


சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்



சோழவந்தான் திரௌபதி அம்மன்கோவில் பூக்குழி திருவிழா வருகிற மே13-ஆம் தேதி முதல் ஆரம்பமாகி மே 24-ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாவில் மகாபாரதகதையில் வரக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் புரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 13 திங்கட்கிழமை முதல் நாள் மாலை கொடியேற்றம், மே 14 செவ்வாய் மாலை சக்திகரகம், மே 15 புதன்கிழமை காலை 10 மணியளவில் திருக்கல்யாணம்,மாலை அம்மனும் சுவாமியும் வீதிஉலா, மே 16 வியாழக்கிழமை சர்க்கரையுக கோட்டை சைத்தவன், துரோணாச்சாரி வேடம், மே 17 வெள்ளிக்கிழமை கருப்பட்டி கிராமத்தில்  பீமன்,,கீசகன் வேடம் மே 18 சனிக்கிழமை சோழவந்தானில் பீமன்,கீசகன் வதம், மே 19ஞாயிற்றுக்கிழமை மாலை அர்ஜுனன் வேடம்,அம்மன் புறப்பாடு,அர்ஜுன் தபசு,மே 20திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் காளிவேடம், அம்மன்புறப்பாடு,அரவான் பலி ,கருப்பு சாமி வேடம்  நடு இரவு காவல் கொடுத்தல்,மே21 செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் துரோபதை வேடம்,துரியோதனன் படுகளம், அம்மன் புறப்பாடு, திரௌபதை சபதம் முடித்து கூந்தல் முடிப்பு, மே 22புதன்கிழமை மாலை 4 மணி அளவில் மந்தைகளத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்குதல், அம்மன் புறப்பாடு,மே 23 வியாழக்கிழமை மாலை கொடி இறக்கம், வைகை ஆற்றில் தீர்த்தம் ஆடுதல் இரவு கோவில் அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி, அதிகாலையில் அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி வந்து கோவிலில் வந்து அடையும், மே24 வெள்ளிக்கிழமை மாலை பட்டாபிஷேகம்,இரவு வீரவிருந்து நடைபெறுகிறது.இப்படி ஒவ்வொரு நாளும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. தினசரி மகாபாரத தொடர் சொற்பொழிவு மற்றும் ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் தினசரி அன்னதானம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக.

No comments:

Post a Comment

Post Top Ad