சௌபாக்கியம் ஆலயத்தில் குரு பானுக்கு சிறப்பு அபிஷேகம்:
மதுரை மேலமடை தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், மே. 9-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 15 மணியளவில் குரு பானுக்கு சிறப்பு அபிஷேக, அர்ச்சனைகள் வழிபாடுகள் நடைபெறுகிறது. இக் கோயிலில் அமைந்துள்ள தக்ஷிணாமூர்த்திக்கு, மாதந்தோறும் முதல் வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெறும். வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு,
முதல் வியாழக்கிழமை முன்னிட்டு இக்கோயில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்திக்கு, பால், தயிர், மஞ்சள் பொடி, இளநீர் போன்ற வற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரமாகி சிறப்பு பிரச்சனைகள் தீபாராதனை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர். இதே போல, மதுரை அருகே உள்ள சோழவந்தான் பிரளயநாதர் சிவன் ஆலயத்தில், வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறும். மாலை, சிறப்பு அர்ச்சனையில் பக்தர்கள் பங்கேற்று, குருபானுடைய அருளைப் பெறுமாறு கோயில் நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி இளமதி, கணக்கர் சி. பூபதி, எழுத்தர் வசந்த், மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment