மதுரை நகரில் மழை:
மதுரை நகரில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், கடந்த நாட்கள் கடுமையான வெப்பம் நிலவியது.
பகல் பொழுதில் கடுமையான வெப்ப காற்று வீசியது. இதனால் ,மக்கள் அவதி அடைந்தனர். மக்களுடைய அவதியை போக்கும் வகையில், மதுரை நகரில் சனிக்கிழமை மாலை பலத்த்தை மழை பெய்தது .
மதுரை நகரில் அண்ணா நகர், யாகப்ப நகர், கே. கே. நகர், கருப்பாயூரணி, புதூர் ,வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடின. பகலில் நிலவிய வெப்பத்தை தணிக்கும் வகையில் பலத்த மழை பெய்தது. மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியது.
மதுரை மாநகராட்சியால்,, மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் சௌபாக்யா தெரு, ராஜராஜன். தெரு, மருதுபாண்டியர் தெரு, ஆறாவது மெயின் ரோடு பகுதிகளில் புல்டோசரால் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாதால், மக்கள் அவதியடைந்தனர். மதுரை மாநகராட்சி ஆணையாளர் தனி கவனம் செலுத்தி, சாலைகளை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment