அமாவாசை தர்பணம்.
மதுரை மேலமடை, தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்யா விநாயக்கர் ஆலயத்தில், அமாவாசை முன்னிட்டு, பக்தர்கள் முன்னோர்களுக்கு, தர்பணம் செய்தனர்.
பெண்கள், தங்கள் முன்னோர்களை காய்கறிகளை, கோயில் அர்க்கரிடம் தானமாக வழங்கினர்.
மதுரை மேலமடை தாசில்தார் நகர் சித்தி விநாயகர், வரசித்தி விநாயகர், சௌபாக்ய விநாயகர் உள்ள ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, வடைமாலை அணிவித்து வழிபட்டனர்.இதேபோல், மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர கோயிலில், பக்தர்கள் நெய் விளக்கு வழிபட்டனர்.
மதுரை வைகையில் பக்தர்கள் முன்னோர்களை நினைத்து, எள்ளு, தண்ணீரை இறைத்தனர். கோயில்களில் சிவபெருமானுக்கு, தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.
No comments:
Post a Comment