மதுரை அவனியாபுரம் பாண்டிய மன்னர் காலத்திய பாலா மீனாம்பிகை திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 1 May 2024

மதுரை அவனியாபுரம் பாண்டிய மன்னர் காலத்திய பாலா மீனாம்பிகை திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா

 


மதுரை அவனியாபுரம் பாண்டிய மன்னர் காலத்திய பாலா மீனாம்பிகை திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.

யாகபூஜை, அபிஷேகங்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
பாண்டிய மன்னர் காலத்திய ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோவிலில் சித்திரை திருவிழா உட்பட பல்வேறு பிரசித்தி பெற்ற விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இன்று  குரு பெயர்ச்சி தின விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு யாகம் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பால மீனாம்பிகை - கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கொடிமண்டபத்தில் அர்ச்சகர்கள் நாகசுப்பிரமணியன், மனோகரன், சந்திரசேகர் ஆகியோர் யாகசாலை பூஜைகளுக்கு பின் நவகிரக சன்னதியில் உள்ள குருபகவானுக்கு பால், தயிர், பன்னீர் சந்தனம், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது.

பின்னர் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

திருக்கோயில் செயல் அலுவலர் சங்கரேஸ்வரி, மற்றும் பணியாளர்கள் காளிஸ்வரன், சதிஷ் உள்ளிட்டோர் குரு பெயர்ச்சிக்கான பூஜை ஏற்பாடுகளை செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad