சீலக்காரி அம்மன் மகா கும்பாபிஷேகம்: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 21 May 2024

சீலக்காரி அம்மன் மகா கும்பாபிஷேகம்:

 


சீலக்காரி அம்மன் மகா கும்பாபிஷேகம்:


காரியாபட்டி, கரியனேந்தலில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட பேத்தியாள் சீலைக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு,

  

 மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை,  வாஸ்து சாந்தி, முதல் கால  யாகசாலை பூஜை, ஜெப பாராயணம், தீப ஆராதனை நடந்தது. 


இரண்டாம் கால யாகசாலை, பூஜை,  விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்,  வருண ஹோமம்,  சுமங்கலி பூஜை,  கன்னிகா பூஜை,  தனலட்சுமி பூஜை: பாபனாபிஷேகம், திரவியாகுதி  நடந்தது.  மூன்றாம் காலை யாகசாலை, பூஜை,  ருத்ர ஜெபம் சமகம்,  பாராயணம்,  புருஷ சூக்தம். எந்திர பிரதிஷ்டை,  கோபுர கலசம் பிரதிஷ்டை பூஜை நடந்தது.  பெண்கள் குத்து விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.  நேற்று காலை 10.30 மணிக்கு  கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை மெட்டிக்கொண்டு சங்கரேஸ்வர சுவாமிகள், செய்திருந்தனர். அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை, பேத்தியாள் சாமி கும்பிடும் பங்காளிகள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad