மதுரை கோயில்களில் வைகாசி விசாகத் திருவிழா: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 21 May 2024

மதுரை கோயில்களில் வைகாசி விசாகத் திருவிழா:

 


மதுரை கோயில்களில் வைகாசி விசாகத் திருவிழா:


திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பால்குடம் மற்றும் தேர், பறவை காவடி ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர்.


தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கடந்த 14ஆம்  தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

 

அதனைத் தொடர்ந்து, தினமும் சாமி பல்வேறு வாகனங்களில் காலை , மாலை இருவேளைகளிலும் வீதி உலா வருவார்.


 வைகாசி விசாகத்தை முன்னிட்டு, இன்று ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக்கடனாக பால்குடம் மற்றும் இளநீர் காவடி, தேர் , பறவை காவடி, அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவர். அதனைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் வைகை ஆறு சிந்தாமணி, அவனியாபுரம், வில்லாபுரம், போன்ற பகுதியில் இருந்து பால்குடம் எடுத்து குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

அதிகாலை 4. மணிக்கு மதுரையில் பல்வேறு பகுதிகளிலிருந்து, பால்க்குடத்துடன், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வரை நடந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், அருள்மிகு சித்திவிநாயகர் கோயில், சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும், வைகாசி விசாகத்தையொட்டி, முருகனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகத்தை செய்யப்பட்டது.இதையடுத்து, முருகன் அலங்காரமாகி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழஙாகப்பட்டது.


இதறாகான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பெண்கள் பக்தர்கள் குழுவினர் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad