சோழவந்தான் அருகே, இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார் :
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். மருத்துவர் அணி மாவட்ட துணைச் செயலாளர் கருப்பட்டி கருப்பையா, வரவேற்புரை ஆற்றினார் . முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம். வி. கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் அரியூர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி காளிதாஸ், அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், செல்லம்பட்டி எம். வி. பி. ராஜா, இலக்கிய அணி ரகு ,மருத்துவர் அணி விஜய் பாண்டி, மகளிர் அணி லட்சுமி, வனிதா, பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன், வாடிப்பட்டி அசோக் ,ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கப்பாண்டி, நாச்சிகுளம் தங்கப்பாண்டி, தென்கரை இராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, நிர்வாகிகள் தண்டபாணி, தியாகு, முனியாண்டி, பேட்டை பாலா மாரி, எஸ் .பி. மணி, துரைக்கண்ணன், ஜெயபிரகாஷ், மன்னாடி மங்கலம் ராஜபாண்டி, குருவித்துறை விஜய் பாபு, வழக்கறிஞர் காசிநாதன், வாடிப்பட்டி ராமசாமி, சந்தனத்துறை,விவசாய அணி வாவிடமருதூர் குமார், மாவட்ட பிரதிநிதி கேட்டுக்கடை முரளி ,அண்ணா தொழிற்சங்கம் சக்திவேல், பாண்டி,மதுரைமேற்கு மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் மகளிர் அணியினர் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் சார்புஅணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் அதிமுகவின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார். முன்னதாக, பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment