சோழவந்தானில் அதிமுக சார்பில் 25வது நாளாக நீர் மோர் வழங்கல் பொதுமக்கள் பாராட்டு:
தமிழகத்தில் சென்ற மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தமிழக முழுவதும் அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்ட நிலையில் , வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு சென்ற மாதம் நீர் மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், தொடர்ந்து 25 வது நாளாக ஒவ்வொரு நாளும் அதிமுகவின் பல்வேறு பொறுப்பாளர்களும் பொறுப்பேற்றுக் கொண்டு நீர்மோர் வழங்கி வருகின்றனர். இன்று 25 ஆவது நாளாக நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி மாரியம்மன் கோவில் முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணி வரவேற்றார். நிர்வாகிகள் ஒன்றிய இளைஞரணி செயலாளர் தண்டபாணி, சோழவந்தான் பேரூர் 10வது வார்டு செயலாளர் மணிகண்டன், ஜூஸ் கடை கென்னடி,பெட்ரோல் பங்க் சசி, பி.ஆர்.சி. நாகராஜ், வெடிகுண்டு ராசு மற்றும் அதிமுகவின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்கள். தொடர்ந்து, 25- வது நாளாக நீர் மோர் வழங்கி வரும் அதிமுகவினரை, பொதுமக்கள் பாராட்டி சென்றனர்.
No comments:
Post a Comment