மதுரை கிழக்கு ஒன்றியம் திமுக மற்றும் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் இலவச நீர், மோர் பந்தல் விழா:
மதுரை யா.ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் சாலையில், கிழக்கு ஒன்றியம் தி.மு.க மற்றும் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், கோடை வெயில் காலத்தை முன்னிட்டும் பொதுமக்கள் நலன் கருதியும், திருமோகூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.பி.ஆர். அண்ணாமலை தலைமையில் இலவச நீர், மோர் பந்தல் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய துணைச் சேர்மன் பாலாண்டி, வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வண்ணி முத்துப்பாண்டி, யா.ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தபாக்ரவி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினர். இதில் திமுக கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment