செவிலியர் தினத்தை முன்னிட்டு அதற்கு முன்னதாகவே மதுரை ப்ரீத்தி மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கூந்தல்களை இழந்து உள்ள பெண்களுக்கு இலவசமாக கூந்தல் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 4 May 2024

செவிலியர் தினத்தை முன்னிட்டு அதற்கு முன்னதாகவே மதுரை ப்ரீத்தி மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கூந்தல்களை இழந்து உள்ள பெண்களுக்கு இலவசமாக கூந்தல் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது


 மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரி செவிலியர் மாணவிகள் 300 க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு தங்களது கூந்தலை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கும் விதமாகவும் அனைத்து பெண்களும் தங்களது கூந்தலை இலவசமாக வழங்க முன்வர வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.




செவிலியர் தினத்தை முன்னிட்டு அதற்கு முன்னதாகவே மதுரை ப்ரீத்தி மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கூந்தல்களை இழந்து உள்ள பெண்களுக்கு இலவசமாக கூந்தல் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த நிகழ்வில் மதுரை சிவகங்கை தேனி திண்டுக்கல்லை சார்ந்த அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் செவிலியர் பயிற்சி மையத்தில் பயின்று வரும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களது கூந்தல்களை இலவசமாக வழங்க முன் வந்தனர்.


இதற்காக  மருத்துவமனை பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது இன்று காலை தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் மாணவிகள் ஆர்வமாக வந்து தங்களது கூந்தல்களை வழங்கி வருகின்றனர்.


நிகழ்ச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய  தனியார் செவிலியர் மருத்துவ கல்லூரி முதல்வர் சிவகாமி கூறும்போது வருடம் தோறும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது இவ்வாறு பாதிக்கப்படும்போது அவர்கள் தலைமுடி உடல் ரோமங்கள் அனைத்தும் கொட்ட துவங்கி விடுகிறது இதனால் அவர்களது குடும்பத்தினரே அவரை தனிமைப்படுத்த கூடிய சூழல் ஏற்படுகிறது இதனால் அவர்கள் தன்னம்பிக்கை இழந்து விடுகின்றனர் இவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இயற்கையாக வளரக்கூடிய முடிகளை நாங்கள் இலவசமாக வழங்க முடிவு செய்து இந்த நிகழ்வு துவங்கப்பட்டது இவ்வாறு கொடுப்பதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தன்னம்பிக்கை வரும் என்றார்.


இதே போல் தங்களது கூந்தல்களை இலவசமாக வழங்கிய செவிலியர் மாணவிகள் தாங்கள் கண்ணும் கருத்துமாகவும் மிகவும் சிரமப்பட்டு வளர்த்த கூந்தலை வழங்குவதில் சிறிது கஷ்டம் இருந்தாலும் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்குவதை நினைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது நாங்கள் மருத்துவத்துறையில் இருப்பதால் ஒரு முன்மாதிரியாக எங்களது கூந்தல்களை வழங்குகின்றோம் இதுபோல் அனைத்து  மாணவியரும் பெண்களும் வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad