கூடலகப் பெருமாள் கோயிலில், வைகாசி பெருந்திருவிழா:
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருவிழா; கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலப்பெருமை கொண்ட திருக்கோவிலாகவும் விளங்கும் மதுரை கூடலழகர் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி , மேளதாளங்கள் முழங்கிட பூஜிக்கப்பட்ட கொடி பல்லக்கில் கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் வேதமந்திரங்கள் முழங்கிட கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, வைகாசி பெருவிழா மே 16 முதல் 29 வரை 14 நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது. மேலும் ,மே .19 -ல் கருட சேவையும், 24- ல் சிகர நிகழ்ச்சியான தேரோட்டமும், அன்றே தசாவதாரமும் நடைபெற உள்ளது.
விழாவின் போது, வியூக சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
M
No comments:
Post a Comment