திருமங்கலம் அருள்மிகு ஸ்ரீ இரட்டை முக விநாயகர் ஆலய புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா -ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த தே.கல்லுப்பட்டி ஜெமினி நகரில் அமைந்துள்ள இரட்டை முக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா தே.கல்லுப்பட்டி ஜெமினி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ இரட்டை முக விநாயகர் ஆலய புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக முதல் கால யாக சாலைபூஜை நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலசத்திற்கு சிறப்பு பூஜையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை மங்கள இசையுடன் ஸ்ரீ மகா கணபதி பூஜை, கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேள்வி, பிம்ப சுத்தி, நாடி சந்தனம் தொடங்கி மஹா பூரணாகதியுடன் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றது. தொடர்ந்து புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவில் வளாகத்தை சுற்றி வந்து அருள்மிகு ஸ்ரீ இரட்டை முக விநாயகர் திருக்கோவிலின் கோபுர கலசங்களுக்கு மேளதாளங்கள் முழங்க புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து, இரட்டிப்பு நலம் தரும் இரட்டை முக விநாயகருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது பின்னர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment