விஜயபிரபாகரன் பெயரில் வி(V) உள்ளது வி என்பது வெற்றி சின்னம். விருதுநகரிலும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு பெட்டியில் நாலாம் இடத்தில் இருக்கும் முரசு சின்னம் வரும் ஜூன் 4 தேதி முதல் இடத்தில் இருக்க வேண்டும் - விஜய பிரபாதரன் வாக்காளர்களிடம் வேண்டுகோள் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 15 April 2024

விஜயபிரபாகரன் பெயரில் வி(V) உள்ளது வி என்பது வெற்றி சின்னம். விருதுநகரிலும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு பெட்டியில் நாலாம் இடத்தில் இருக்கும் முரசு சின்னம் வரும் ஜூன் 4 தேதி முதல் இடத்தில் இருக்க வேண்டும் - விஜய பிரபாதரன் வாக்காளர்களிடம் வேண்டுகோள்


 விஜயபிரபாகரன் பெயரில் வி(V) உள்ளது வி என்பது வெற்றி சின்னம். விருதுநகரிலும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு பெட்டியில் நாலாம் இடத்தில் இருக்கும் முரசு சின்னம் வரும் ஜூன் 4  தேதி முதல் இடத்தில் இருக்க வேண்டும் - விஜய பிரபாதரன் வாக்காளர்களிடம் வேண்டுகோள்



விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.


விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி குட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற  தொகுதியில் வலையங்குளம், வலையபட்டி, ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், தொட்டிய பட்டி, சூரக்குளம், பரம்பு பட்டி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ஒன்றிய செயலாளர் முருகன், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.


MLA ராஜன் செல்லப்பா கூறுகையில்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அப்பாவை போல் நல்ல மனம் படைத்தவர் கட்டிடக்கலை பட்டம் படித்துள்ளார் இளைஞர் இந்த வெற்றி கூட்டணிக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறினார் '


பின்னர் வாக்காளர்களிடம் பேசிய தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் கூறும்போது
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக விஜய பிரபாகன் நான் உங்க முன்னாடி வந்து பேசுகிறேன்.


என் சொந்த ஊரு மதுரை என் அப்பா பிறந்தது விருதுநகர் வளர்ந்து மதுரை, நடிகராக அரசியல் தலைவராக சென்னையில் வாழ்ந்தார்.


கேப்டன் மறைவுக்கு பிறகு  மதுரைக்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கும் போது  தேர்தல் வந்தது. விருதுநகர் என் சொந்த ஊர். உங்கள் சொந்த பிள்ளையாக வந்துள்ளேன்.



எனது அப்பா விஜயகாந்த் பெயர் முதல் எழுத்து வி வெற்றிக்கு வருவது வி அவர் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது விருத்தாச்சலம் தொகுதியில் தான். அதேபோல் எனது பெயர் விஜய பிரபாகரன் வெற்றிக்கு வி நான் முதன்முதலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற செய்யுங்கள்.


உங்கள் அன்பு மகனுக்கு முரசு சின்னத்துக்கு. கொடுக்கணும் நான் கேட்டுக்குறேன்.


கேப்டன் மறைந்து 100 நாட்கள் மேல ஆயிருச்சு சென்னை செலுத்த முடியல எவ்ளோ துக்கங்கள் சோகங்கள் எனக்குள்ள இருந்தாலும் அது எல்லாமே எனக்குள்ள அடக்கிப் புதைச்சு உங்க முன்னாடி தைரியமா சிரிச்ச புன்னகையோட உங்க கிட்ட வந்து வாக்குகளை கேட்கிறேன். கடைசி வரைக்கும் உங்களோடு இருப்பேன். இங்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் 10 ஆண்டு காலம் எதுவும் செய்யவில்லை.



மதுரை மக்களுக்கு எய்ம்ஸ் மருத்துவ மனை வர வேண்டும்.
33 மாதங்களில் கட்டி முடிவுக்கு வரும் என கூறுகிறார்கள், ஏற்கனவே 33 மாதம் கடந்து மொத்தம் 66 மாதம் ஆகும் நிலை.
என்னை பாராளுமன்ற உறுப்பினராத தேர்ந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்க நடவடிக்கை எடுப்பேன்.



கடந்த காலகட்டங்களில் எத்தனை எமர்சன் சி கேங்கள், பிரசவம் காலங்களில் எத்தனை பேர் கஷ்டப்ட்டு இருப்பார்கள் . சென்னைக்கு அடுத்து பெரிய தலைநகரம் மதுரை இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால் எத்தனை டாக்டர்கள் படித்து இருப்பார்கள் எவ்வளவு தொழில் உருவாகி இருக்கும்
இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாய்ப்பளித்தீர்கள்
பத்தாண்டுகள் இருந்து என்ன செய்தார்.நான் ஒரு இளைஞர் வந்து நிற்கிறேன்எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் என்னை தேர்ந்தெடுக்க வேண்டும்.
நீங்கள் சிந்திக்க வேண்டும் எல்லா நேரத்திலும் சிந்திக்க வேண்டும்.



எனது அப்பா மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும் என்று சொல்வார். என்னை ஜெயிக்க வைத்தால்மலையங்குளம் நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைத்து தருவேன்ஏதோ வந்தேன் போனையும் பேசினேன் என்று நினைக்காதீர்கள்
உங்களுக்காக உழைக்க போராட்டத்தையாக இருக்கிறேன் இ இங்குள்ளஅனைவரையும் கேட்கிறேன் சிந்தித்து செயல்படுங்கள் உங்களுக்காக உழைக்க தயாராக இருக்கிறேன்.
என் அப்பாவின் கனவிற்கும் ஏப்ரல் 19 நாலாம் நம்பர் பட்டன் முரசு சின்னம் ஒரு குத்து அப்புறம் 5 வரும்   உங்களுக்கான ஒரு கெத்து நமது சின்னம் முரசு என்ன சின்னம் எத்தனை நம்பர் என பொது மக்களிடம் விஐய பிரபாகரன் கேட்டார்.
ஏப்ரல் 19ம் தேதி முரசு சின்னம் 4வது இடத்தில் இருக்கும். ஆனால் ஜூன் 4 தேதி முதல் நம்பராக இருந்த வேண்டும் என விஜய பிரபாகரன் வாக்காளர்களிடம் "முரசு" சின்னத்தில் வாக்கு கேட்டார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருமங்கலம்
செய்தியாளர் R. வினோத் பாபு

No comments:

Post a Comment

Post Top Ad