உசிலம்பட்டி அருகே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் கார்களில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 16 April 2024

உசிலம்பட்டி அருகே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் கார்களில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்:

 


உசிலம்பட்டி அருகே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் கார்களில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்:



மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர், கல்லூத்து, வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட உசிலம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று அதிமுக தேனி தொகுதி வேட்பாளர் நாரயணசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



இந்த வாக்கு சேகரிப்புக்கு செல்லும் வழியில், உசிலம்பட்டி அருகே காமராஜர் நகரில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்களின் கார்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஏதும் கொண்டு செல்லப்படுகிறதா என, ஒவ்வொரு கார்களிலும் சோதனை நடத்தினர். சோதனையின் போது, திமுகவினர் பணம் கொடுக்கின்றனர். அவர்களை போய் பிடிங்க அதை விடுத்து, எங்களை சோதனை செய்யாதீங்க என அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பறக்கும் படையினரின் இந்த சோதனையில் பணம் ஏதும் பிடிபடவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad