மதுரை சித்தரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் அறங்காவலர்கள் கூட்டம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 16 April 2024

மதுரை சித்தரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் அறங்காவலர்கள் கூட்டம்

 


மதுரை சித்தரை திருவிழாவை முன்னிட்டு  மீனாட்சியம்மன் திருக்கோயிலில் அறங்காவலர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகத்தில் கோயில் தக்கார் செங்கோல் வாங்கி கோயிலை வலம் வந்து மீண்டும் மீனாட்சி கையில் ஒப்படைப்பார். கொடியேற்றம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேர் திருவிழாவில் தக்காருக்கு தான் பரிவட்டம் கட்டும் வழக்கம் உள்ளது.


ஆனால் இப்போது நடந்த அறங்காவலர்கள் கூட்டத்தில் கோயில் அர்ச்சகர் அனைவரும் கூடி பரிபூரணமானவர்களுக்கு (தம்பதியாக உள்ளவர்கள்) மட்டுமே பரிவட்டம், செங்கோல் வழங்க முடியும் என்றும், மீனாட்சியம்மன் கோயில் தக்காரான ருக்மணி பழனிவேல் ராஜன் விதவை என்பதால் வழங்க ஆகம விதியில் இடமில்லை என்று கூறியதால் 5 மணி நேரம் ருக்மணி விவாதம் செய்து தான் தான் வாங்குவேன் உத்தரவாக  கூறி உள்ளார்.


இது குறித்து ருக்மணி தரப்பில் பேசிய போது பெண் ஆட்சி செய்யும் கோயிலில் ஒரு பெண்ணுக்கு மரியாதை தர முடியாது என்பது தவறான செயல் என்றும், சித்திரை திருவிழா அழைப்பிதழில் செங்கோல் குறித்த அனைத்தும் போட்டுவிட்டு, கடைசி நேரத்தில் மறுப்பது தவறான செயல் என கூறுகிறார்கள்.


அர்ச்சகர்கள் தரப்பில் ஆகம விதிப்படி தம்பதிகள் சமிதமாக தான் விழாக்களில் யாகசாலை, கொடியேற்றம், பட்டாபிஷேகம், சிறப்புமிக்க மீனாட்சி திருக்கல்யாணத்தில் அமர்ந்து துவங்க வேண்டும். உலகத்தை ஆளும் மீனாட்சியின் திருவிழாவில் வந்து தனக்கும் தன் குடும்ப பாரம்பரியம் உள்ளது என பேசி வழக்கத்திற்கு மாறாக பக்தர்களுக்கு மனவேதனை அளிக்கும்படி ஆகவிதிகளுக்கு மாறாக தனக்கு தான் மரியாதை, பரிவட்டம், செங்கோல் வேண்டும் என உத்தரவிடுவதும்,  அமைச்சரின் அம்மாவான அவர் ஒட்டு மொத்த மக்களின் நலனை பாராமல் , சுயநலமாக உத்தரவிடுவது அவரின் தவறான சுயநல குணத்தையே காட்டுகிறுது.மேலும்  தக்காரே பெருந்தன்மையாக உலக மக்கள் நன்மைக்காக ஒதுங்குவது அவருக்கு நல்ல பெயரை கொடுக்கும் என்கிறார்கள்.


இது குறித்து கோயில் பணியாளர்களிடம் விசாரித்த போது அவர்கள் “கோயிலின் முன் ஆண் பெண் என பாகுபாடு பார்ப்பது தவறு என்றும், தமிழக அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரிசமாக அறங்காவலராக நியமித்தவரை ஆகம விதி என கூறி புறக்கணிப்பது நியாயமில்லை “என்றும் கூறுகிறார்கள்.


அர்ச்சகர்கள் ,இந்து பக்தர்கள் சபை மற்றும் அரசியல் இயக்கத்தினர் ‘ஆகம விதியை மீறக்கூடாது எனவும், அமைச்சரின் தாயார் என்பதற்காகவும், அவர்களின் பண்ணையார் பெருமையை காட்டுவதற்காக , ஒட்டு மொத்த உலகையாளும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் புனிதத்தையும், உலக நன்மையும், பக்தர்களின் மனநிலையும் கருத்தில் கொள்ளாமல், தன் குடும்ப பெருமை, கௌரவத்திற்காக தீமையை உலகிற்கு தர முயற்சிக்கிறார்.


இதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்’ என்கிறார்கள் இந்து பக்தர்கள் சபை.
தேர்தல் நேரத்தில் மதுரையில் இந்த சலசலப்பு தேவையா?.

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்.12 துவங்குகியது. அதே போல் தேர்தல் நாள் (ஏப்19)அன்று தான் செங்கோல் வாங்கும் பட்டாபிஷேக நிகழ்ச்சியும் உள்ளது.


ஆட்சி அதிகாரத்தை மாற்றும் அளவுக்கு இந்த செங்கோல் பட்டாபிஷேக நிகழ்ச்சி அமைய போகிறது என கோயில் பக்தர்கள் ஆரூடம் கூறுகிறார்கள்.


தமிழக அரசிடம் பக்தர்கள் எதிர்பார்ப்பது புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை சிறப்பாகவும் சுமூகமாகவும் நடத்திட வழி செய்திட வேண்டும் என்பதே..

No comments:

Post a Comment

Post Top Ad