திருமங்கலம் கப்பலூர் சுங்க சாவடியை அகற்றக்கோரி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 16 April 2024

திருமங்கலம் கப்பலூர் சுங்க சாவடியை அகற்றக்கோரி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருமங்கலம் கப்பலூர் சுங்க சாவடியை அகற்றக்கோரி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மதுரை கப்பலூர் சுங்க சாவடி அகற்ற வலியுறுத்தி இன்று 16 ஆம் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக சுங்க சாவடி எதிர்ப்பு குழுவினர் அறிவித்திருந்தனர் இதற்கு ஆதரவாக கப்பலூர் தொழிற்பேட்டை சங்கம் சார்பாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் பகுதியில் சிங்க சாவடி அகற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த சுங்க சாவடியை மேலக்கோட்டை விளக்கு பகுதியில் மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் மக்கள் தேர்தலை புறக்கணிப்பது என சுங்க சாவடி எதிர்ப்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.



தற்போது கப்பலூர் சுங்க சாவடி எதிர்ப்பு குழுவினர் மற்றும் திருமங்கலத்தில் உள்ள பல்வேறு அமைப்பினர் இணைந்து இன்று திருமங்கலம் நகரில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இது தொடர்பாக ஆலோசனை நடத்திய கப்பலூர் தொழில்பேட்டை சங்கத்தினர் சார்பாக தலைவர் ரகுபதி ராஜா இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் இரண்டாவது பெரிய தொழில் பேட்டையாக இருக்கக்கூடிய கப்பலூர் தொழில்பேட்டையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனால் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பொதுமக்கள் அறிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad