மதுரை அரசு மருத்துவமனையில் தேர்தல் விதிமுறைகளை மீறி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் படம் இடம் பெற்றதாக புகார் - பறக்கும் படையினர் நடவடிக்கை - அமைச்சர் மற்றும் முதலமைச்சர் படம் அகற்றம்: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 16 April 2024

மதுரை அரசு மருத்துவமனையில் தேர்தல் விதிமுறைகளை மீறி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் படம் இடம் பெற்றதாக புகார் - பறக்கும் படையினர் நடவடிக்கை - அமைச்சர் மற்றும் முதலமைச்சர் படம் அகற்றம்:


 மதுரை அரசு மருத்துவமனையில் தேர்தல் விதிமுறைகளை மீறி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் படம் இடம் பெற்றதாக புகார் - பறக்கும் படையினர்  நடவடிக்கை - அமைச்சர் மற்றும் முதலமைச்சர் படம் அகற்றம்:



தமிழகத்தில் முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தல்  அறிவிக்கப்பட்டு வாக்கு சேகரிப்பு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த நிலையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் படங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் இடம்பெறக்கூடாது என்பதால், ஆங்காங்கே மறைக்கப்பட்டது. 



இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டை மீறி, மதுரை அண்ணாபேருந்து நிலைய பகுதியில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி பிரிவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மூர்த்தி , பழனிவேல் தியாகராஜன் ,ம.சுப்பிரமணியன் ஆகியோரது படங்கள் இருப்பதாக தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வந்தது.



இதனையடுத்து, புகாரின் அடிப்படையில் அங்கு விரைந்துவந்த பறக்கும் படை அதிகாரிகள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் படங்களை மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.



மதுரை மாவட்டத்தில், தேர்தல் நடத்தைகள் அமலில் இருந்தாலும் பல்வேறு பகுதிகளிலும் அமைச்சர்களுடைய பெயருடன் இருக்கக்கூடிய பெயர் பலகைகள் மற்றும் படங்கள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை என, தொடர் புகார்கள் வந்தவண்ணம் உள்ளது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad