உரத் தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி ஒருவாக்கு கூட பதிவு செய்யாமல் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள் - அதிகாரிகள் பேச்சு வார்த்தை தோல்வி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 19 April 2024

உரத் தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி ஒருவாக்கு கூட பதிவு செய்யாமல் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள் - அதிகாரிகள் பேச்சு வார்த்தை தோல்வி

 


உரத் தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி ஒருவாக்கு கூட பதிவு செய்யாமல் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள் - அதிகாரிகள் பேச்சு வார்த்தை தோல்வி


திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி தாலுகா கே. சென்னம்பட்டியில் தனியார் உரத் தொழிற்சாலை  கழிவுகள் வெளியேறுவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் மேலும் கழிவுகளால் இப்பகுதியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்வளம், நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் குற்றம் சாட்டி இன்று கே. சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம், ஆவல் சூரன்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து தற்போது வரை தங்களது வாக்கை பதிவு செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் கிராம மக்கள் இன்று நடைபெற்ற தேர்தலை புறக்கணித்தனர் .. 3 கிராமங்களில் மட்டும் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளது. .

தற்போது வரை

கே.சென்னம் பட்டி : மொத்த வாக்குகள் - 1036
பதிவான வாக்குகள் : 0

பேய்க்குளம் : மொத்த வாக்குகள் - 1185
பதிவான வாக்குகள் : 0

மேலப்பட்டி : மொத்த வாக்குகள் - 514
பதிவான வாக்குகள் - 145

ஓடைப்பட்டி : மொத்த வாக்குகள் - 634
பதிவான வாக்குகள் - 10

ஆவல் சூரன் பட்டி :
மொத்த வாக்குகள் - 1681 பதிவான வாக்குகள் - 12


ஐந்து கிராமங்களிலும் சேர்த்து மொத்த வாக்குகள் : 5050,

பதிவான வாக்குகள்:  167

No comments:

Post a Comment

Post Top Ad