திருமங்கலம் அருகே தனியார் கெமிக்கல் நிறுவனத்திற்கு எதிராக கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பு; அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 19 April 2024

திருமங்கலம் அருகே தனியார் கெமிக்கல் நிறுவனத்திற்கு எதிராக கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பு; அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை


திருமங்கலம் அருகே தனியார் கெமிக்கல் நிறுவனத்திற்கு எதிராக கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பு; அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்


மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கே.சென்னம்பட்டி கிராம பகுதியில் கேரளாவை சேர்ந்த தனியார் கெமிக்கல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனத்தில் இறைச்சி கழிவுகளை சுத்திகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் கோழி இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து சுத்திகரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் ஆறுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மேலும் இறைச்சி கழிவுகளிலிருந்து  வெளியேறக்கூடிய கழிவு நீரால் சுற்றுவட்ட கிராமப்புற பகுதிகளில் மண்வளம் மற்றும் நீர்வளம் பாதிக்கப்படுவதாகவும் எனவே அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் ஏற்கனவே கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று இரவு அப்பகுதிக்கு கோழி கழிவுகளை ஏற்றி வந்த மினி வேனை சிறை பிடித்து கே.சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் உள்ளிட்ட கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணிக்கு திடீரென கள்ளிக்குடி -  காரியாபட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கும் வரை சாலை மறியலில் கைவிடப்போவதில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்து இருந்தனர். அதன் பின்னர் காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அமைதியாக கலைந்து சென்றனர்.


இந்நிலையில் தற்போது அந்த நிறுவனத்தை மூடி சீல் வைக்கவில்லை என்றால் நாங்கள் யாரும் ஓட்டு போட போவதில்லை என்று தேர்தலை புறக்கணித்துள்ளனர் அதனால் தற்போது திருமங்கலம் டிஎஸ்பி,  வருவாய் கோட்டாட்சியர் சாந்தி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


தொடர்ந்து ஒளி பெருக்கி மூலம் தற்காலிகமாக இந்த நிறுவனம் மூடப்பட்டதாகவும் வருகிற 22 ஆம் தேதி கூட்டம் நடத்தி அதில் தீர்வு காணும் எனவும் அறிவித்த போதிலும் பொதுமக்கள் அதற்கு உடன் படாததால் கோட்டாட்சியர் சாந்தி இங்கிருந்து புறப்பட்டார். தொடர்ந்து தாசில்தார் செந்தாமரை மற்றும் மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த் தற்போது பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad