இதுவரை 14 கோடிக்கு வேளாண் விளைபொருட்கள் மறைமுக ஏலம் மூலம் விற்று சாதனை . - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 16 April 2024

இதுவரை 14 கோடிக்கு வேளாண் விளைபொருட்கள் மறைமுக ஏலம் மூலம் விற்று சாதனை .

 


இதுவரை  14 கோடிக்கு வேளாண் விளைபொருட்கள் மறைமுக ஏலம் மூலம் விற்று சாதனை .


  திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4038 மெட்ரிக் டன் விளைபொருட்கள் விற்று சாதனை.

      திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி விவசாயி மற்றும் காளப்பன்பட்டி, குப்பலநத்தம், உசிலம்பட்டி, புதுப்பட்டி  ஆகிய விவசாயிகளின் மக்காச்சோளம் கோவைக்கு விற்று தரப்பட்டது

  காளப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயின் குதிரைவாலி சேலத்திற்கு விற்றுத் தரப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்
விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (16.04.2024) கீழ்க்கண்ட விளைபொருட்கள் இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டது.


1. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி விவசாயி மற்றும் குப்பலநத்தம்,  புதுப்பட்டி, உசிலம்பட்டி, காளப்பன்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின்  125530 கிலோ மக்காச்சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு குறைந்தபட்ச விலையாக ரூ 25.20 க்கும் அதிகபட்ச விலையாக ரூ 25.50 க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ 31,80,961 க்கு வர்த்தகம் நடைபெற்றது.

2. காளப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 27865 கிலோ குதிரைவாலி ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு  அதிகபட்ச விலையாக ரூ 41.25 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 1149431/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

3. லாலாபுரம், கிழவனேரி, கீழஉப்பிலிக்குண்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின்  247.6 கிலோ மிளகாய்வற்றல் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ 125 க்கும் அதிகபட்சமாக ரூ 150 க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ 31675/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.    

4. தொட்டியபட்டி தாடையம்பட்டி  ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 450.900 கிலோ எள் ஏலத்திற்கு வந்தது. அது  கிலோ ஒன்றுக்கு ரூ 140 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 63126 /-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

5. செங்கப்படை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட  27 கிலோ ஆவாரம்பூ ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 90 க்கு விலை போனது. இதன் மூலம் 2430/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. 
  
6. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 57.800 கிலோ சூரியகாந்திவிதை ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 46  க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 2659/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.    

7. பழையூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 187.900 கிலோ அக்ஷயா நெல்    ஏலத்திற்கு வந்தது. அது  கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 25 க்கும் விலை போனது. இதன் மூலம் 4698/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

8. செல்லம்பட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட  2580 கிலோ கருப்புக்கவுனி நெல்  ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 80 க்கு விலை போனது. இதன் மூலம் 206400/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. 
    
9. திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் கொண்டுவரப்பட்ட சாமை அரிசி 15 கிலோ குதிரைவாலி அரிசி 10 கிலோ வரகுஅரிசி 10 கிலோ ஆகியவை ஏலத்திற்கு வந்தது. அது  கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக சாமை அரிசி 90 க்கும் குதிரைவாலி அரிசி 97 க்கும் வரகு அரிசி 82 க்கும் விலை போனது. இதன் மூலம் 3170/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

10. கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த  ஒரு விவசாயியின் 591.600 கிலோ கருப்புக்கவுனி அரிசி  ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 82.50 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 48807/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. 

11. வாகைகுளம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்பு கூட்டப்பட்ட கடலை எண்ணெய் 8 லிட்டர்  தேங்காய் எண்ணெய் 2 லிட்டர்  கோதுமைமாவு 4 கிலோ  கேப்பைமாவு 2 கிலோ  கம்புமாவு 2 கிலோ ஆகியவை ஏலத்திற்கு வந்தது. அவை கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக கடலை எண்ணெய் லிட்டர் 280க்கும் தேங்காய் எண்ணெய் லிட்டர் 240 க்கும் கோதுமைமாவு கிலோ 60க்கும் கேப்பைமாவு கிலோ 60க்கும் கம்புமாவு கிலோ 50க்கும் விலை போனது. இதன் மூலம் 3200/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.      

          ஆக மொத்தம் கடந்த வாரத்தில் ரூ 4696527/- க்கு வர்த்தகம் நடைபெற்றது.
      மேற்படி  திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4038 மெட்ரிக் டன் அளவுள்ள பல்வேறு வேளாண் விளை பொருட்களை 14 கோடிக்கு மேல் விற்று தரப்பட்டுள்ளது.

         மேலும்  விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை  9025152075லும் மேற்பார்வையாளரை 9600802823 லும் சந்தை பகுப்பாளரை 8754379755 லும் ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad