மதுரை விமான நிலையம் வந்த முதல்வரை பார்த்து மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 30 April 2024

மதுரை விமான நிலையம் வந்த முதல்வரை பார்த்து மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு:


மதுரை விமான நிலையம்  வந்த முதல்வரை பார்த்து மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு:


தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் செல்வதற்காக  தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தார் .


மதுரை விமான நிலையத்திற்கு முதல்வர் வருகையொட்டி மதுரை மாநகர் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுரை விமான நிலையத்திற்கு பார்த்து மனு கொடுப்பதற்காக வந்த பாஜக நிர்வாகியால்  பரபரப்பு ஏற்பட்டது.

 

தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தடுக்க வேண்டிய மனு அளிப்பதற்காக பாஜக செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி வந்துள்ளார்.

 

மதுரை விமான நிலையம் வந்த பாஜக நிர்வாகியை  போலீசார் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து, காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad