குடியிருப்பு பகுதியில் சரியாக மூடாத கழிவுநீர் மூடியால் தாய் மகள் சென்ற இருசக்கர வாகன விபத்து - தாய் மகள் சென்று விபத்துகுள்ளாகும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 28 April 2024

குடியிருப்பு பகுதியில் சரியாக மூடாத கழிவுநீர் மூடியால் தாய் மகள் சென்ற இருசக்கர வாகன விபத்து - தாய் மகள் சென்று விபத்துகுள்ளாகும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

 


மதுரை வில்லாபுரம் வீட்டு வழிவாரிய குடியிருப்பு பகுதியில் சரியாக மூடாத கழிவுநீர் மூடியால் தாய் மகள் சென்ற இருசக்கர வாகன விபத்து - தாய் மகள் சென்று விபத்துகுள்ளாகும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு


மதுரை மாநகராட்சியின் அலட்சியமான பணியினால் உயிர் சேதம் ஏற்படும் அவலம்.




மதுரை மாநகராட்சி உட்பட 84 வார்டு வில்லாபுரம் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காகவும் கழிவுநீர் செல்வதற்காகவும் பாதாள சாக்கடை வேலைகள் நடைபெற்றது. இந்த நிலையில்  வில்லாவரம் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு சாலையில் கழிவு நீர் செல்லும் இடத்தில் மூடி சரியாக மூடிவைக்கப்படாமல் பல நாட்களாக இருந்துள்ளது.



இந்த நிலையில் 26/04/2024அன்று  இரவு இருசக்கர வாகனத்தில் வந்த தாய் மற்றும் அவரது மகள் இந்த இடத்தை கடக்கும் போது பல நாட்களாக  சரியாக மூடாமல் இருந்த கழிவு நீர் மூடியில் இடித்து தலை குப்புற கவிழ்த்து விபத்து ஏற்பட்டது, விபத்துக்குள்ளானது அறிந்த அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை தூக்கி உதவி செய்து உள்ளனர்,



அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படாமல் தப்பினர், தாய் மகள் இருவரும் விபத்துக்குள்ளான  பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


மற்ற இடங்களிலும் இதுபோன்று முறையாக பழுது பார்க்கப்படாத பாதாள சாக்கடை மூடிகளை மாநகராட்சி உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வில்லாபுரம் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad