மதுரை அருகே உலக ஆய்வக வார விழா:
மதுரை,திருப்பரங்குன்றம் அருகே, வலையன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக ஆய்வக வாரவிழா கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, வளையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக ஆய்வக வார விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, வட்டார மருத்துவர் டாக்டர் தனசேகரன் தலைமை தாங்கினார். மருத்துவர் ஜெயந்தி வரவேற்புரை கூறினர் .
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன், அழகுமலை மற்றும் சுகாதார ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உலக ஆய்வக வார விழா வலையங்குளம் ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் கேக் வெட்டி கொண்டப்பட்டது.
தீவிர நோய் தாக்கத்தில் இருந்த 15 காசநோயாளிகளுக்கு,
ஊட்ட சத்து பொருட்கள், அரிசி,கொண்டை கடலை, பேரிச்சம்பளம், பச்சை பயறு சத்துமாவு ஆகியவை வழங்கப்பட்டது.
வலையன்குளம் சுகாதார மைய வளாகத்தில் 20 மரக்கன்றுகளை நட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் சங்க மாநில செயலாளர் மரியதாஸ் செய்திருந்தார்.
No comments:
Post a Comment