அலங்காநல்லூர் அருகே, முடுவார்பட்டியில் மகா சம்ரோட்சன விழா ஆயிரத்துக்கு மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் : - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 22 April 2024

அலங்காநல்லூர் அருகே, முடுவார்பட்டியில் மகா சம்ரோட்சன விழா ஆயிரத்துக்கு மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் :


அலங்காநல்லூர் அருகே, முடுவார்பட்டியில் மகா சம்ரோட்சன விழா ஆயிரத்துக்கு மேற்பட்டோர்களுக்கு அன்னதானம் :


மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் கிழக்கு தெரு கவுண்டர் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அழகு மலையான் , ஸ்ரீ கருப்புசாமி, ஸ்ரீ சௌந்தரி யம்மன் கோவில் மகா சம்ப்ரோட்சன விழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியாக, ஊத்துக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து மாலையில், அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை வாஸ்து சாந்தி, திக்பந்தனம் , கலாகர்சனம், முதல் கால யாக பூஜை மற்றும் பூர்வாங்க பூசை, வேதாரண்யம் மற்றும் ஏழு விதமான யாகங்கள் நடைபெற்றது. இரவு பூர்னா குதி,சதுர் வேதம், திராவிட வேதம், ஆசீர்வாதம், தீப ஆராதனை நடைபெற்றன. மறுநாள் காலை திங்கட்கிழமை அன்று மண்டப சாந்தி, கோ பூஜை தொடர்ந்து, இரண்டாம் கால வேள்வி ஸ்ரீ லட்சுமி பூசை குலதெய்வ ஹோமம் திரவியாகுதி   நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, பூர்னா குதி, சதுர் வேதம், தீப ஆராதனையும் நடைபெற்று, சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, முடுவார் பட்டி கிழக்கு தெரு கவுண்டர் பங்காளிகள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad