மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருத்தோராட்டம்: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 22 April 2024

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருத்தோராட்டம்:

 


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருத்தோராட்டம்:


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய தேரோட்டம் நடைபெற்றது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.nஅதையடுத்து, மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது.


ஏராளமான பக்தர்கள், மீனாட்சியம்மன் தேராட்டத்தை கண்டு தரிசித்தனர் விழாவையொட்டி,  பக்தர்கள் நீர் மோர், பானகம் வழங்கினர். சோழவந்தான் பகுதியில் சித்திரை திருவிழா திருக்கல்யாணதேரோட்டம்:


சோழவந்தான் அருகே, தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாணம் நிகழ்ச்சியை முன்னிட்டு, தேரோட்ட திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூல நாத சுவாமி தேரில் வலம் வந்தனர். சுவாமியையும், அம்பாலையும் வரவேற்று அர்ச்சனை பூஜைகள் செய்தனர். பக்தர்களுக்கு நீர் மோர் அன்னதானம் வழங்கினர்.


 வழி நெடுக வாழைப்பழம் மற்றும் மாம்பழம் சூறையிட்டனர். விழா ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர். கோவில் அர்ச்சகர் செந்தில் குமரேசன் தீபாராதனை மற்றும் மகா தீபாரதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.


செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, கோவில் பணியாளர்கள் மணி, நித்தியா, ஜனார்த்தனன் உள்பட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad