தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்தது திமுக அரசு தான் ஆர். பி. உதயகுமார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 12 April 2024

தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்தது திமுக அரசு தான் ஆர். பி. உதயகுமார்.


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவுடன் கூட்டணி கட்சியாக சேர்ந்திருக்கும் தேமுதிகட்சியின் வேட்பாளர் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகின்றார். அவருக்கு வாக்கு சேகரிக்க விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களான கல்லுப்பட்டி, பேரையூர், கள்ளிக்குடி, செக்கானூரணி, ஆகிய பகுதிகளில் விஜயபிரபாகரனை ஆதரித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

இதில் அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக அமைச்சர் தியாகராஜன் பொய் சொல்கிறார் என உதயகுமார் கூறினார். தாலிக்கு தங்க திட்டத்தை ஜெயலிதா கொண்டு வந்தார் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் 12.50 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்க திட்டத்தை வழங்கினோம் இதில் இல்லத்தரசிகள் அனைவரும் பயன்பெற்றனர். ஆனால் இத்திட்டத்தை ரத்து செய்து செயல்படாமல் போனதற்கு திமுக அரசு தான் முக்கிய காரணம் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு லேப்டாப் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள், கொரோனா காலகட்டத்தில் கூட ஒரு லட்சம் தங்க காசுகளை அதிமுக அரசு கொடுத்து இருக்கிறது ஆனால் இவர்கள் கொரோனா நோய் தொற்று காலத்தில் ஒரு திட்டங்களை கூட செயல்படுத்தவில்லை இதிலிருந்து திமுக அரசு பச்சை பச்சையாக பொய் சொல்கின்றன இப்படி இருக்கும் சூழ்நிலையில் மக்கள் இதற்கு நீங்கள் தான் இந்த தேர்தலில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார்.  


மேலும் விஜய பிரபாகரன் வாக்கு சேகரிக்கும் போது இந்த தவசி புள்ள வாக்கு மாற மாட்டான் என்று கூறி பிரச்சாரம் செய்தார். என் தந்தை விஜயகாந்த் மறைவுக்கு பின் மக்களுக்கும் எங்களுக்குமான பந்தம் முடிந்து விடுமோ என்று பயந்தேன் அவர் மறைவுக்கு பின் என் தாய் தான் கூட இருக்கிறார் அதே போல் நீங்களும் என்னைப் பார்த்து கொள்ள வேண்டும். ஏப்ரல் 19ஆம் தேதி இந்த தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் துளசி கூட வாசம் மாறும் ஆனால் இந்த தவசி புள்ள வாக்கு மாற மாட்டான் என்று சினிமா பட டயலாக்கில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். 


இந்தப் பிரச்சார கூட்டத்தில் அதிமுக ஒன்றிய நகர செயலாளர் தேமுதிக ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad