14 ஆண்டுகளாக சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வரும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து வருகின்ற 16ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 12 April 2024

14 ஆண்டுகளாக சட்ட விதிகளை மீறி செயல்பட்டு வரும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து வருகின்ற 16ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம்.


14 ஆண்டுகளாக சட்ட விதிகளை மீறி கப்பலூர் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இதில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்க சாவடி  விதிகளை மீறி செயல்படுகிறது. இதை அகற்ற கோரி பலமுறை மத்திய அரசு மாநில அரசுகளிடம் மனுக்களை கொடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் பாதிக்கப்பட்டு வரும் ஓட்டுநர் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்தனர் இதனால் பலமுறை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டும் உண்ணாவிரதம் போராட்டம் என, தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், என பல முறை மனுக்கள் கொடுத்து வந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

தமிழக முதல்வராக மு. க. ஸ்டாலின் பதவிஏற்று ஆட்சி வந்த பிறகு தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளை அகற்றப்படும் என்று சட்டமன்றத்தில் அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை வெறும் கண்துடைப்பு தான் என்று பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர் உரிமையாளர்கள் கூறி வந்தனர். எனவே சுங்கச்சாவடியை அகற்றாவிடில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என்று ஓட்டுநர் உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் திருமங்கல நகர் முழுவதும் விளம்பரபதாதைகள், துண்டு பிரசுரங்கள் வைத்து வந்தனர் அதற்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மத்திய அரசு மாநில அரசு இதை கருத்தில் கொண்டு வருகின்ற செவ்வாய்க்கிழமை 16.4.2024 அன்று திருமங்கலம் நகர் முழுவதும் ஒரு நாள் முழு கடையடைப்பு நடத்தப்படும் என்று அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கங்கள் தேர்தலை புறக்கணிப்போம் ஒரு நாள் முழு கடையடைப்பு நடத்தப்படும் இந்த தேர்தலில் நாங்கள் எந்த ஒரு கட்சிக்கும் நாங்கள் வாக்கு செலுத்த மாட்டோம் என்று கூறி வருகின்றனர். 


மேலும் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றது இதை தட்டி கேட்டால் சுங்கச்சாவடியில் இருக்கும் நபர்கள் அடியாட்களை வைத்து மிரட்டி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதால் இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்  இல்லை என்றால்  முழு கடையடைப்பு மற்றும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று கூறி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad