மதுரை விரகனூர் நெடுஞ்சாலை பாலத்தின் நடுவே கருப்பு லாரி கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் காயம் - போக்குவரத்து பாதிப்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 12 April 2024

மதுரை விரகனூர் நெடுஞ்சாலை பாலத்தின் நடுவே கருப்பு லாரி கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் காயம் - போக்குவரத்து பாதிப்பு.


நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சண்முகம் ராஜபாளையம் பகுதியில் இருந்து சிவகங்கை பூவந்தி பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்று கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது லாரி விரகனூர் நெடுஞ்சாலை மேம்பாலம் நடுவே சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் சண்முகம் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த போக்குவரத்துக் காவல்துறையினர் பாலம் நடுவே விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி சாலை முழுவதும் சிதறி கிடந்த கரும்புகளை ஜேசிபி வாகனங்கள் கொண்டு அப்புறப்படுத்தினர். இதனால் விருதுநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் அங்குள்ள போக்குவரத்து போலீசார் ஒருவழி பாதையாக மாற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.


இன்று மதுரையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ள நிலையில் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தான் இன்று வாகன ஒத்திகை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad