இதில், ஆயுதப்படை பெண் காவலர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் ஆகிய 100க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் இந்த கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை நரசிங்கம் ஆர்ச் பகுதியில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பினை ஊமச்சிக்குளம் காவல்துறை சரக துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.
மேலும், சிலைமான் மற்றும் ஒத்தக்கடை காவல் ஆய்வாளர்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மத்திய தொழிற்படையினர் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, கொடி அணிவகுப்பானது ஒத்தக்கடை வேளாண் கல்லூரி வரையிலும், பின்னர், திருமோகூர் வரை சென்று உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பு வரை சென்றடைத்து நிறைவடைந்தது. கொடி அணிவகுப்பை முன்னிட்டு, ஆங்காங்கே போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment