சோழவந்தான் பூ மேட்டு தெரு உச்சிமாகாளி அம்மன் வடக்கத்தி காளியம்மன் கோவில் பங்குனிதிருவிழா 500க்கும்மேற்பட்டோர் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 19 March 2024

சோழவந்தான் பூ மேட்டு தெரு உச்சிமாகாளி அம்மன் வடக்கத்தி காளியம்மன் கோவில் பங்குனிதிருவிழா 500க்கும்மேற்பட்டோர் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன்.


மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டு தெரு வைகை ஆற்றங்கரையில் அருள்மிகு உச்சி மாகாளியம்மன் கோவில் வடக்கத்தி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம் இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும்  திருவிழாவிற்கான கொடியேற்றுதல் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்று பொதுமக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்  விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் குழந்தைகள் பால் எடுத்து வந்தனர் சோழவந்தான் வைகை ஆற்றில் இருந்து புறப்பட்ட பால்குடம் வட்ட பிள்ளையார் கோவில் பெரிய கடை வீதி மாரியம்மன் கோவில் வந்து தெற்கு தெரு மேலரத வீதி வழியாக கோயிலில் வந்தடைந்தது தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவும் நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாதாரணை நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சோழவந்தான் தொழிலதிபரும் ஆன்மீக செம்மலுமான மணி முத்தையா வள்ளி மயில் கல்வியாளர்லயன் டாக்டர் எம் வி எம் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad