சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். மாரியம்மன் சன்னதி தெருவில் பல கடைகள் ரோட்டை ஆக்கிரமித்து இருப்பதால் வாகனங்கள் நிறுத்துவதில் மிகவும் சிரமப்பட்டு கோவில் முன்பு குறுக்கும் நெருக்கமாக வாகனங்களை நிறுத்துவதால் பக்தர்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் மாரியம்மன் சன்னதி தெரு உள்ளது. இங்குள்ள ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி டூ வீலர் நிறுத்துவதற்கு டூ வீலர் பார்க்கிங் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் மற்றும் கோவிலுக்கு வரக்கூடிய நான்கு சக்கர வாகனங்கள் ஒற்றை அக்ரஹாரத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ரயில்வே மேம்பாலத்தில் இருந்து மேற்கே வரக்கூடிய வாகனங்கள் வட்ட பிள்ளையார் கோவில் வடக்குவீதி வழியாக மாரியம்மன் சன்னதி தெரு வழியாக வெளியேற வேண்டும். அக்ரஹாரத் தெருவில் வாகனங்கள் வருவதால் இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் காலையில் பள்ளிக்கு வருவதற்கும், பள்ளி முடித்து வீட்டுக்கு செல்வதற்கும் அக்ரகாரம் தெருவைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்து கூட ஏற்படுகிறது. அந்த அளவுக்கு வாகனங்கள் அதிக வேகத்தில் வருகிறது. இதனால் அக்ரகாரத் தெருவில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும்.
மாரியம்மன் சன்னதி தெருவில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி, டூவீலர் மற்றும் வாகனங்கள் குறுக்கும் மறுக்குமாக நிறுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும், இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை, இந்துசமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment