திமுக சார்பில் தமிழகத்தில் 38 எம்பிக்கள் இருந்தும் மத்திய அரசிடம் 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு ஒரு ரூபாய் கூட பெற முடியாத திமுகவிற்கு வருகின்ற தேர்தலில் எம்பிக்கள் எதற்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 20 March 2024

திமுக சார்பில் தமிழகத்தில் 38 எம்பிக்கள் இருந்தும் மத்திய அரசிடம் 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு ஒரு ரூபாய் கூட பெற முடியாத திமுகவிற்கு வருகின்ற தேர்தலில் எம்பிக்கள் எதற்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு.


மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து தொடர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசினார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது சோழவந்தான் தொகுதியில் தற்போதுவாக்காளர்கள் வெரிபிகேஷன் மற்றும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தல் உள்ளிட்ட பணிகளின் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. 

 

திமுகவின் மூன்று ஆண்டு கால ஆட்சியில் திமுகவுக்கு வாக்களித்த மக்கள் கொதிப்படைந்து உள்ளார்கள் திமுக மீது உள்ளகோபத்தை அதி முக்கிய ஆதரவாக மாற்றுவதற்கும் அந்தக் கோபம் வாக்குகளாக எடப்பாடிக்கு ஆதரவாக அமையும் என்ற நம்பிக்கையுடன் களம் காண்கிறோம் தேர்தல் அறிக்கை எப்போது வரும் என்ற கேள்விக்கு தேர்தல் பணிக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க நத்தம் விஸ்வநாதன் தலைமையில்  முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் எம்எல்ஏக்கள்9 மண்டலங்களில் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களை ஆராய்ந்து வரைவு தொகுப்பாக தேர்தல் அறிக்கை குழு சமர்ப்பித்து இருக்கிறது அதை முழுமையான ஆய்வுக்கு பொது செயலாளர் எடுத்துக் கொண்டிருக்கிறார் மிக விரைவில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிக்கை வெளிவரலாம். 


தற்போது கூட வேட்பாளர்களை முதலில் அறிவித்த கட்சி அதிமுக எப்போதுமே முதன்மையாக இருக்கக்கூடிய கட்சி அதிமுக ஆகையால்இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கக் கூடிய அளவில் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுவார் 


நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவுக்கு எதிரான முக்கிய பிரச்சாரமாக எவை இருக்கும் என்ற கேள்விக்கு, திமுகவுக்கு எதிரான தேர்தல் பிரச்சாரமாக அதிக அளவில் போதை பொருள்  புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது வெள்ளம் வந்தபோது செயல்படாதது மத்திய அரசிடம் திமுக அரசு37,000 கோடி கேட்டார்கள் ஆனால் ஒரு ரூபாய் கூட பெற முடியாத கையாலாகாத அரசாக திமுக உள்ளது. 


38 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வைத்திருந்தும் 37,000 கோடி கேட்டு ஒரு ரூபாய் கூட பெற முடியாத உங்களுக்கு எதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள் அதையே மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். அதிமுக எம்பிக்கள் காவேரி பிரச்சனைக்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி இருக்கிறோம் ஆனால் இங்கு மேகதாது பாலாறு முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு முதல்வர் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை கர்நாடக முதல்வர் துணை முதல்வர் அங்கு சொல்லும்போது தமிழக முதல்வர் இங்கு வாய் திறக்க வேண்டும் இவை அனைத்தும் தமிழக விரோத போக்கு உச்சநீதிமன்றத்தால் நமக்கு அறிவித்த நீரை கூட பெற முடியவில்லை. 


மேலும் எல்லா அணையிலும் நீர் வற்றிவிட்டது அதனால் தமிழகத்தில்குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாய நிலை உள்ளது இதை முறையாக கையாளவில்லை குறிப்பாகமேட்டூரில் இருந்து முல்லைப் பெரியாறு வைகை ஆறு வரை எல்லா வனையும் தீர்ந்து போய்விட்டது கண்மாயில் தண்ணீர் இல்லை இதற்கு தான்  மாண்புமிகு அம்மா கொண்டு வந்த மழைநீர் வடிகால் திட்டம் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த குடிமராமத்து திட்டம் நதிநீர் இணைப்பு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த கூறினோம் ஆனால் திமுக அரசு அதனை எல்லாம்  கிடப்பில் போட்டு விட்டார்கள் இதனால் நீர் ஆதாரத்தில் தோல்வி அடைந்து விட்டார்கள் இதன் காரணமாக டெல்டா மாவட்டம் விரைவில் பாலைவனமாகவும் சூழல் ஏற்பட்டுள்ளது 


மத்திய அரசின் பாராமுகம் பற்றிய கேள்விக்கு, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு காட்டுகிற மாறுபாட்டை அதாவது பாரதப் பிரதமர் வேறு மாநிலத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் காட்டுகின்ற அணுகுமுறை பின்புலத்தையும் மக்கள் தெரிந்து கொள்வார்கள். புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி பேரறிஞர் அண்ணா ஆன்மா தமிழ்நாட்டை சுற்றிக்கொண்டே உள்ளது அதேபோல் எங்கள் உயிர் போனாலும் எங்களின் ஆன்மா தமிழ்நாட்டையே சுற்றிக் கொண்டிருக்கும் ஆனால் திடீர் வரவுகளான ஒரு சிலரின் ஆன்மா எங்கே சுத்திகிட்டு இருக்கும் என்று  அவர்களை கேட்டால்தான் தெரியும். 


ஜெயலலிதாவை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு, புரட்சித்தலைவி அம்மாவின் புகழை ஒவ்வொரு அதிமுக தொண்டனும் நினைக்காத நாளில்லை அவர் புகழை கூறியே வாக்குகள் சேகரிக்க இருக்கிறோம் அதேபோல் உலக தலைவர்களான அன்னை தெரசா கிளாரி கிளின்டன் பில் கிளின்டன் ஆகியோர் அம்மாவைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள் அதேபோல் பிரதமர் பாராட்டியது மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்பதைப் போல சொல்லி இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் சொல்ல வேண்டியது. 


சொல்ல வேண்டியது வாஜ்பாய் போன்று நல்லாட்சி தருவோம் என்றும்அத்வானி பற்றியும் சொல்லி இருக்க வேண்டும் அம்மாவை சொல்லியதில் எங்களுக்கு பெருமையே ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று கூறினார். 


தமிமுன் அன்சாரி பேசிய பேச்சு பற்றிய கேள்விக்கு, கட்டுமரம் யார் கடலில் கரையப் போவது யார் டைட்டானிக் கப்பல் யார் என்று தேர்தல் முடிந்த பிறகு தெரியும் என்று கூறினார், இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் மகேந்திரன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன் ரவிச்சந்திரன் அரியூர் ராதாகிருஷ்ணன் காளிதாஸ் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad