திருமங்கலத்தில் திமுக தலைவர் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 4 March 2024

திருமங்கலத்தில் திமுக தலைவர் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கடந்த மார்ச் 1ம் தேதி திமுக கட்சியினர் இனிப்புகள் வழங்கியும், கட்சி கொடியேற்றியும் கொண்டாடினர். அதேபோல் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.அதன் அடிப்படையில் இன்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு மருத்துவமனையில் மார்ச் 1ம் தேதி பிறந்த 6 குழந்தைகளுக்கு மதுரை திமுக தெற்க்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தங்க மோதிரம் வழங்கினார். 

இந்நிகழ்வில் நகர செயலாளர் மூ.சி.சோ. ஸ்ரீதர், நகராட்சி துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள், மாணவர் அணி,இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad