திருமங்கலம் - கொல்லம் இடையிலான நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் ரோடு பணி துவக்கம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 4 March 2024

திருமங்கலம் - கொல்லம் இடையிலான நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் ரோடு பணி துவக்கம்.


திருமங்கலம் கொல்லம் இடையே புதியதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் கட்டராம்பட்டி விளக்கு மற்றும் திருமங்கலம் நகர் நுழைவு பகுதிகளில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருமங்கலத்தில் இருந்து கேரளா மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலை 744 செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் துவங்கப்பட்டு சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. 

திருமங்கலத்தில் இருந்து கொல்லம் வரை 235 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைய உள்ள இந்த நான்கு வழிச்சாலை திருமங்கலம் நகரில் ஆறு கண் பாலத்தினை தாண்டி துவங்குகிறது. இதற்காக திருமங்கலம் தீயணைப்பு நிலையம் எதிரே விருதுநகர் ரோடு ராஜபாளையம் ரோடு சந்திப்பு பகுதிகளில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. புதியதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் ஆலம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி பிரிவு பகுதி மற்றும் கட்ராம்பட்டி விளக்கு பகுதிகளில் மேம்பாலங்கள் வரவுள்ளது எதற்காக இந்தப் பகுதிகளில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது மேம்பாலத்தில் வழியாக திருமங்கலத்தில் இருந்து கொல்லம் செல்லும் வாகனங்களுக்கும் சர்வீஸ் ரோடு வழியாக கட்டராம்பட்டி விளக்கு வழியாக செங்கப்படை செல்லும் வாகனங்களும் வகையில் இந்த சர்வீஸ் ரோடு அமையப்படவிருக்கிறது.


அதேபோல் சேடப்பட்டி பிரிவு பகுதிகளில் மேம்பாலத்தின் அடியே சேடப்பட்டி சவுடார்பட்டி செல்லும் வாகனங்கள் சென்று வருவதற்கு ஏற்ற வகையாக திருமங்கலம் நகரை ஒட்டி புதியதாக சர்வீஸ் ரோடும் அமைக்கப்பட்டு வருகிறது இந்த சர்வீஸ் ரோடு திருமங்கலம் விருதுநகர் ரோடு சந்திப்பில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன்படி கொல்லம் தென்காசி ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மதுரை வரும் வாகனங்கள் சர்வீஸ் ரோட்டில் செல்லாமல் புதியதாக நான்கு வழிச்சாலையில் வந்து கன்னியாகுமரி மதுரை நான்கு வழிச்சாலையில் இணைந்து கப்பலூர் மார்க்கமாக மதுரைக்கு வழக்கம் போல் செல்லலாம். 


திருமங்கலம் நகருக்குள் வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வாகனங்கள் திருமண வழக்கம் போல் வந்தடையும் வகையில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது திருமங்கலம் கொல்லம் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுவதால் சுற்றுலா மற்றும் கோயில் தளங்களுக்கு விரைவில் வாகனங்கள் சென்றுவர இயலும் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக சபரிமலைக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் கேரளா மாநிலம் புனலூர் வழியாக செல்கின்றன இவை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டால் விரைவில் புனலூர் சென்றடையும் என்பது பக்தர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையும் நாட்டில் விரைவான மற்றும் பாதுகாப்பான வாகன பயணத்திற்கு நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்படுவது வரவேற்க கூடியதாகவே உள்ளது.


இந்த சாலை அமைப்பது மற்றும் பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது இதனால் அவர்கள் சுங்கச்சாவடியை அமைத்து சாலையில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கின்றனர் ஆனால் இந்த கட்டணம் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் மிக அதிகமாக இருப்பதால் வாகன உரிமையாளர்களை வேதனையில் ஆழ்த்தி வருகிறது.


டோல்கேட் எங்கு அமையும் திருமங்கலத்தில் இருந்து கேரளாவின் கொல்லம் வரையில் தற்போது உருவாகும் புதிய நான்கு வழிச்சாலையில் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க டோல் கேட்டுகள் வழக்கம் போல் அமைக்கப்படும் ஆனால் இந்த சாலையில் மதுரை மாவட்ட எல்லையை கடந்து விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் டோல்கேட்டுகள் அமைக்கப்படும் என தெரிகிறது ஏனெனில் கப்பலூர் டோல்கேட்டில் இருந்து 65 கிலோ மீட்டர் தூரம் கடந்து தான் புதிய டோல்கேட் அமைய வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இந்த கணக்கில் உள்ளது.


இதன்படி கப்பலூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை மாவட்ட எல்லை நிறைவடைகிறது இதனால் அடுத்து வரும் விருதுநகர் மாவட்டத்தில் புதியதாக டோல்கேட் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad