திருமங்கலம் அருகே பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் சார்பில் விவசாயிகள் மேளா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 4 March 2024

திருமங்கலம் அருகே பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் சார்பில் விவசாயிகள் மேளா மற்றும் கண்காட்சி நடைபெற்றது.


தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை சார்பில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் PKVY -2023-2024 விவசாயிகள் மேளா மற்றும் கண்காட்சி திருமங்கலம் அருகே கள்ளிக்குடி தாலுகாவில் வேளாண்மை இணை இயக்குநர் ப.சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் இயற்கை விவசாயம் மண் உரம் செயற்கை உரம் தயாரிப்பு முறைகள் பற்றி விளக்கம் அளித்தார் மூலிகை பூச்சி விரட்டி மாட்டுச்சாணம் தில் பஞ்சகவியம் தயாரிப்பு முறைகள் பற்றி கூறினார். 

இயற்கை விவசாயம் என்பது நிலத்தை உலவு செய்யாமல் எவ்வித இடு பொருள்களையும் பயன்படுத்தாமல் குறைந்த களையெடுத்தல் மற்றும் குறைந்தபட்ச இதர வேளாண் பணிகளைக் கொண்டு பயிர் செய்யும் முறையாகும் அதிக செலவு செய்வது குறைவான விளைச்சலை பெறும் விவசாயிகள் ஆங்காங்கே முறை மற்றும் இயற்கை முறை விவசாயம் என்பது செலவில்லா வரப்பிரசாதமாக அமையும் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தின் நுகர்வு திறனை சமாளிப்பதற்கு நிலத்தை பயிர் உற்பத்தி என்பது மிக மிக அவசியமாகும் என்று வேளாண் இணை இயக்குனர். மேலும் கண்காட்சியில் நவதானியத்தில் செய்த பயறு வகைகள் தானிய வகைகள் ஆகியவன இடம்பெற்றிருந்தன. 


இந்நிகழ்ச்சியில் சிவ அமுதன் வேளாண்மை துணை இயக்குனர், ஜெ சந்திரகலா வேளாண்மை உதவி இயக்குனர் சிங்கார லீனா விதைச்சான்று உதவி இயக்குனர் நந்தினி தவராஜன் குமாரி லட்சுமி ஆகிய வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேளாண்மை உதவி இயக்குனர் கள்ளிக்குடி சார்பில் நடைபெற்றது. 

No comments:

Post a Comment

Post Top Ad