திருமங்கலத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 11 March 2024

திருமங்கலத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.


வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கொடுக்க மறுக்கின்ற மோடி அரசைக் கண்டித்தும்,   கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரி விலக்கு செய்த மோடி, விவசாயிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் கடன்களை ரத்து செய்ய மறுக்கும் மோடியை கண்டித்து கண்டன கோஷம். (மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகத்தின் குரல் வலை நெறிக்கப்படும், ஆங்காங்கே பத்திரிக்கை மற்றும் கேமரா மேன் தாக்கப்படுபவர்கள், சுதந்திரமின்றி நடமாட முடியாத நிலை ஏற்படும் எனவும் பேச்சு) மதுரை மாவட்டம், திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு , ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஏராளமான விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு,  ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  

வேளாண் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கொடுக்க மறுக்கின்ற மோடியை கண்டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரி விலக்கு செய்த மோடி, விவசாயிகளுக்கு வரி விலக்கு அளிக்காமலும்,  மாணவ, மாணவிகளின் கல்வி கடன்களை ரத்து செய்யாமலும், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்துவதாகக் கூறி ஏமாற்றிய வஞ்சிக்கின்ற மோடி, அமித்ஷாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad