திருமங்கலம் அருகே குப்பைகளில் தீ வைப்பு; மக்கள் அவதி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 10 February 2024

திருமங்கலம் அருகே குப்பைகளில் தீ வைப்பு; மக்கள் அவதி.


மதுரை அருகே திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழி சாலை சந்திப்பில்,  மலைபோல் தேங்கியுள்ள குப்பை கூளங்களில் மர்ம நபர்கள் தீயிடுவதால்,  புகை மண்டலமாக கிளம்பி துர்நாற்றத்துடன் மூச்சு திணறல் ஏற்படும் நிலை  ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் சாலையில் பரவி வரும் புகையால் விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் நிலை - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பள்ளி குழந்தைகள் முதல் பொதுமக்கள் வேண்டுகோள்  விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் உள்ள குப்பைகளை, நகராட்சி வாகனங்களில் சேகரித்து திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் ஆலம்பட்டி பகுதியில்,  நகராட்சிக்கு சொந்தமான கிடங்கில் டன் கணக்கில் குப்பைகளை ஒட்டுமொத்தமாக மலை போல் தேக்கமடைய செய்வதுடன், அக்குப்பைகளை தரம் பிரிக்கும்  இயந்திரங்கள் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மர்ம நபர்கள் குப்பை கூளங்களில் தீயிட்டுச் செல்வதால், மனிதக் கழிவுகள்,  மாமிசக் கழிவுகள் முதல் மருத்துவக் கழிவுகள் வரை குப்பை கூளங்களில் உள்ளதால், தீயினால் புகைமண்டலம் கிளம்பி சாலையோரங்களிலும் அருகில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கும், அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் இந்த புகை மூச்சுத் திணறல் ஏற்படும் வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும், அவ்வழியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் புகையால் விபத்துக்கள் நிகழும் நிலை உள்ளது என பலமுறை நகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, வேதனையுடன் தெரிவிக்கும் பள்ளி குழந்தைகள் மற்றும் பொது மக்கள்.


தமிழக அரசு இதற்க்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.. 

No comments:

Post a Comment

Post Top Ad