அலங்காநல்லூர் அருகே பள்ளி ஆண்டு விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 10 February 2024

அலங்காநல்லூர் அருகே பள்ளி ஆண்டு விழா.


மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், ராஜாக்கள்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 76 வது ஆண்டு விழா  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை பார்வதி, தலைமை தாங்கினார். இடைநிலை ஆசிரியர் ஷண்முகப்பிரியா, முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர் தொழிலதிபர் டாக்டர் ஏ.வி .பார்த்திபன், கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் விளையாடி தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து, பள்ளியின் சார்பாக டாக்டர் ஏ.வி பார்த்திபன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில், ஊராட்சி மன்றத் தலைவர் பழனிச்சாமி, வழக்கறிஞர் கேசவன், பள்ளி மாணவ மாணவிகள்  மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad