முள்ளிபள்ளம் அரசு மேல்நிலை பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 10 February 2024

முள்ளிபள்ளம் அரசு மேல்நிலை பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா.


சோழவந்தான் அருகே, முள்ளி பள்ளம் அரசு மேல்நிலை பள்ளியில், ஆண்டு விழா மற்றும் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆண்டு விழா மற்றும் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கேபிள்ராஜா முன்னிலை வகித்தார்.


ஒன்றியக் கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன், உதவி தலைமை ஆசிரியர் தீபா, தமிழ் ஆசிரியர்கள் சாந்தி, உமா, உதவி ஆசிரியர் அலெக்சாண்டர் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இங்கு பதினோராம் வகுப்பு மாணவ மாணவிகள் 60 நபர்களுக்கு அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. இதில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் முள்ளிப்பள்ளம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad