ஆறு போல ஓடும் பாதாள சாக்கடை நீர் பலமுறை புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் நோய் தொற்று பரவும் அபாயம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 7 February 2024

ஆறு போல ஓடும் பாதாள சாக்கடை நீர் பலமுறை புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் நோய் தொற்று பரவும் அபாயம்.


மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டு உட்பட்ட பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு ஆகாஷ் தெரு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில், பாதாள சாக்கடை நீர் மேல் எழும்பி ஆறு போல சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்பு வாசிகள் பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். 

மேலும், துர்நாற்றம் அதிகம் வீசுவதால் மூச்சு திணறல் ஏற்படுவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டை முன் விடுகின்றனர். மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களை நோய் தொற்றில் இருந்து காக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை கொடுக்கின்றனர். மேலும் ,தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி கிருமி நாசினி தெளித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு துர்நாற்றத்தில் இருந்து காக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். 


நடவடிக்கை எடுப்பார்களாம் மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிடுவாரா? ஆணையாளர் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad